Sunday, 15 September 2013

மாடுகளுக்கான மடிவீக்க நோய் முதலுதவி மூலிகை மருத்துவம்

கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண் கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும்.


மடியினை நன்கு கழுவி,சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

*ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப்பொருட்கள்*

- சோ ற்றுக்கற்றாழை – 200 கிராம் [ஒரு மடல்]
- மஞ்சள் பொடி – 50 கிராம்
- சுண்ணாம்பு – 5 கிராம் [ஒரு புளியங்கொட்டை அளவு]

*சிகிச்சை முறை:* [வெளிப்பூச்சு]

மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவவேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும்.

*தகவல்:* டாக்டர் N.புண்ணியமூர்த்தி, தலைவர் மற்றும் பேராசிரியர்,
கால்நடைப்பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்.

மடி நோய்க்கு காரணம் முழுக்க முழுக்க பண்ணை தரை மற்றும் பசுக்கள் கட்டும் இடம் அசுத்தமாக இருப்பது தான் மேலும் பெரும்பாலும் நாட்டு பசுக்களை மடி நோய் தாக்குவதில்லை ஏன் என்றால் நாட்டு பசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் அதனால் கவலை கொள்ள தேவை இல்லை

முதலில் வெதுவெதுப்பான நீரில் மடியை நன்கு கழுவிவிட்டு விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் மாடு தாங்கும் அளவிற்கு சிறிது சூடு செய்து காலை மற்றும் மாலை தடவி விடுங்கள். எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி தின்ன கொடுங்கள்.. கட்டும் இடத்தை சுத்தமாக வையுங்க

No comments:

Post a Comment